பிரபல நடிகை விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சின்னத்திரை நடிகை மெபியானா மைக்கேல் விபத்தில் மரணம்.
நடிகை மெபியானா மைக்கேல் பிரபலமான கன்னட தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான மடிகேரிக்கு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் எதிர்பாராத விதமாக தேவிஹள்ளி அருகே வந்துகொண்டிருந்த டிராக்டரில் மோதியது.
இதனையடுத்து, மெபியானா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், நடிகை மெபியானா-வுக்கு பாதிப்பு பலமாக இருந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.