தெலுங்கானாவில் ஒரு ‘ சுர்ஜித் ‘ 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை
தெலுங்கானா வை சேர்ந்த 3 வயது குழந்தை விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க 120 அடி ஆழத்திற்கு தோண்டியுள்ளனர் .இன்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.
குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்த்துளை கிணற்றுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.கிணற்றை தோண்ட இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் .குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளதாகவும் அங்குள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தை கிணற்றில் விழுந்ததை கண்ட பெற்றோர் முதலில் சேலையை வைத்து மீட்க முயற்சித்துள்ளனர் ஆனால் அந்த முயற்சி பயனில்லாமல் முடிந்திருக்கிறது.இந்த தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் சாய் வர்தனை மீட்க கடுமையாக போராடி வருகிறது.
இந்த ஆழ்த்துளை கிணறானது செய்வாய்க்கிழமை இரவுதான் தோண்டப்பட்டுள்ளது .120 அடி ஆழத்திற்கு தோண்டியும் தண்ணீர் வராததால் அவர்கள் மூடாமல் சென்றுள்ளனர் .இந்நிலையில் குழந்தை அதில் விழுந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.