ஹேப்பி நியூஸ்.! இன்று முதல் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் முடிவடைகிறது
அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாகவும், நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் உக்கிரமாக கருதப்படுவது அக்னி நட்சத்திர வெயில் தான். இதன் தாக்கம் வருடா வருடம் பகலில் வெளியில் சுற்றுபவர்களை சுட்டெரிக்கும் வகையில் உக்கிரமாக இருக்கும்.
இந்த அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டுமே தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெயிலின் அளவு சதமடித்துள்ளது. தற்போது தான் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதாம். இதனால், அங்கு பல பகுதிகளில் வெயிலுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.