அசுரன் பட நாயகியின் ‘காயாட்டம்’ பட போஸ்டர் இதோ.!
ரம்ஜான் ஸ்பெஷலாக காயாட்டம் படத்தில் வெவ்வேறு கெட்டப்களில் நடித்த மஞ்சு வாரியரின் ஒரு கெட்டப் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாளாக நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றார்.தற்போது இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. மேலும் பல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் படங்களில் ஒன்றான காயாட்டம் படத்தின் போஸ்ட்ர் ஒன்று ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர். சனல் குமார் சசிதரன் இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நாடு முழுவதும் சுற்றும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரதீஷ் ஈட்டிலம் இசையமைக்கும் இந்த படத்தை ஷாஜி மேத்யூ மற்றும் அருணா மேத்யூடன் இணைந்து மஞ்சு வாரியரின் தயாரிப்பு நிறுவனமான என்டர்டெயின்மெண்ட் டெஸ்க் தயாரிக்கிறது. மேலும் சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் நடைப்பெற்றது. இந்த நிலையில் ரம்ஜான் ஸ்பெஷலாக காயாட்டம் படத்தில் வெவ்வேறு கெட்டப்களில் நடித்த மஞ்சு வாரியரின் ஒரு கெட்டப் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Coming soon! #kayattam #kayattammovie #ahr
Eid Mubarak! pic.twitter.com/XlDuWe6dO9— Manju Warrier (@ManjuWarrier4) May 24, 2020