10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேரளா மாநிலத்தில் தேர்வுகள் துவக்கம்!

கேரளாவில் ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவக்கம்.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து வரும் நிலையில், இந்தியாவிலும் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு அதிகமாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்விக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளும் அடைக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் படங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வீட்டிலிருந்த படி பாடங்கள் கற்பிக்கப்பட்டது.
இந்நிலையில், த்ரோபழுது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கேரளா முழுவதும் இன்று நடைபெறுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பே மாணவர்களின் வீடுகளுக்கு முக கவசம் அரசால் வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சானிடைசரும் வழங்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளி ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதியும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டை சேர்ந்த மாணவர்களுக்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025