கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா.!
கேரளா மாநிலத்தில் இன்று 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு 4-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 1,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று உறுதி செய்யப்பட்ட 67 பேரில், 27 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 33 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என தெரிவித்தார்.
மேலும், கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 359-லிருந்து 415-ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.