ரஷிய அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்!!

ஜெர்மனியில் அடுத்த வாரம் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது என்னென்ன விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி நிரல் தயார் செய்யும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
ரஷியா தவிர, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, சீனா, மெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களையும் டிரம்ப் சந்திக்க உள்ளார். 
இந்த சந்திப்புகளின் பொதுவான முக்கிய நோக்கம் அமெரிக்காவின் வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் அதன் உள்நாட்டு நலனை பாதுகாப்பது ஆகும் என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டது என்று பரபரப்பான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இருநாட்டுத் தலைவர்கள் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan

Leave a Comment