கல்யாண தினத்தன்று குடும்பத்தினருக்கு “ஸ்வீட் சப்ரைஸ்” கொடுத்த சச்சின்.. உங்களால இது முடியுமா?
நேற்று தனது 25 ஆம் திருமண நாளன்று ஒரு இனிப்பான “மாம்பழ குல்பியை” செய்து அவரின் குடும்பத்தினருக்கு இனிப்பான சர்ப்ரைஸை வழங்கினார்.
இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. பலரும் தங்களின் வீட்டிலே இருக்கும் நிலையில், சமூகவலைத்தளங்களில் ஆட்டிவாக உள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். குறிப்பாக டேவிட் வார்னர் டிக்டாக்கில் நடனமாடி விடியோக்களை பதிவேற்றி வந்தார். தனது 25 ஆம் திருமண நாளை சச்சின் டெண்டுல்கர் கொண்டாடும் விதமாக, அவரின் குடும்பத்தினருக்கு ஒரு இனிப்பான சர்ப்ரைஸை வழங்கினார்.
யாரும் செய்யாத வகையில், அவர் மாம்பழங்களை வைத்து புதுமையான வகையில் “மாம்பழ குல்பி” செய்து அசத்தினார். அதாவது, மாம்பழத்திற்குள் குல்பியை வைத்து அவர் செய்தது ரசிகர்களின் கண்களை வெகுவாக கவர்ந்தது. அது தொடர்பான விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
View this post on InstagramMade this Mango Kulfi as a surprise for everyone at home on our 25th wedding anniversary. ???? ☺️
அந்த வீடியோவில் ஒரு சமையல் கலைஞரை போலவே, அவர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை செய்து, அதனை சாப்பிட்டுப்பார்த்து அதன் சுவைக்கூறித்து கூறினார். தற்பொழுது அவரின் இந்த வீடியோ, ரசிகர்கள் பலரின் வாயில் எச்சில் ஊற வைக்கிறது.