பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை உளவுபார்க்க வந்த புறா.. கையும்களவுமாக மாட்டியது!
இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் சந்தகத்திற்கிடமான புறா ஒன்று சிக்கியுள்ளது. இது, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க பாகிஸ்தான் அனுப்பியிருக்கலாம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள வெலியில் புறா ஒன்று சிக்கியிருப்பதை அங்குவசிக்கும் மக்கள் கண்டனர். அந்த புறாவில் ஏதேனும் வித்தியாசமாக இருப்பதை கண்டனர். மேலும், போலீசுக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு காவல் துறை கண்காளிப்பாளர் சைலேந்திர பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் அந்த புறாவை பார்த்தனர். அந்த புறாவின் காலில் சந்தகத்திற்கிடமான ஒரு மோதிரம் இருந்ததை பார்த்தனர். இந்த புறா, பாகிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்த புறாவை அனுப்பியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், இந்த புறா எங்கிருந்து கிளம்பியது? இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில் அனுப்பியிருக்கலாமோ? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சிறப்பு காவல் துறை கண்காளிப்பாளர் சைலேந்திர பாலாஜி தெரிவித்தார்.