இனி நீதிமன்றம் போகத் தேவையில்லை.! ஆன்லைனில் செலுத்தலாம்.! இன்று முதல் தொடக்கம்.!

Default Image

சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. 

சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். வேகமாக செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது, சிக்னலை மீறுவது போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று விதி மீறலில் ஈடுபடுவோர் இ-சலான் முறையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை போக்குவரத்து போலீசார் வகுத்துள்ள முறைப்படி செலுத்தலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் நேரில் சென்று கூட செலுத்தலாம்.

இந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைன் மூலமாக அபராதம் செலுத்தும் திட்டத்தை, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, டி.எஸ்.சிவஞானம் தலைமையில், கணினி குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். சாலை விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகன எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் விர்சுவல் கோர்ட்ஸ் என்ற இணையதளத்தில் பதிவிடப்படும். இதன்பின், வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். அதன்படி, அபராத தொகையை, ஆன்லைனில் செலுத்தலாம். 

சென்னையில், இந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்ற இ-கமிட்டி தலைவராக உள்ள நீதிபதி சந்திரசூட், டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். இதுபோன்று ஏற்கெனவே டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வசதி ஏற்படுத்தும் வகையில் விர்ச்சூவல் எனப்படும் மெய்நிகர் நீதிமன்றங்களை தொடங்க உத்தரவிட்டார். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் மெய்நிகர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்