கொரோனா: ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்தை தாண்டியது.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8731 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது.
சென்னையில் நேற்று மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தண்டியுள்ளது.
ராயபுரத்தில் 2,065 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,988 பேரும், திரு.வி.க. நகரில் 1,253 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
March 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
March 18, 2025