2018 தமிழக பட்ஜெட்:நீதித்துறை, காவல்துறை, தீயணைப்புக்கான அறிவிப்புகள்!
இன்று காலை வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணியளவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
இதில் காவல்துறை, தீயணைப்பு, நீதித்துறை தொடர்பான அறிவிப்புகள் பின்வருமாறு:
காவல்துறை பயன்பாட்டிற்காக 15 காவல்நிலைய கட்டடங்களும், 543 குடியிருப்புகளும் கட்டித்தரப்படும்.
மணலியில் ரு.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்புத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.347 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.சிறைத் துறைக்கு ரூ. 306 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
காவல் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கை இந்த அண்டு முதல் உயர்த்தப்படும். 1,500 காவலர் விருதுகள் இந்த ஆண்டு முதல் 3000 ஆக உயர்த்தப்படும்.காவல்துறைக்கு ரூ.7,877 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,197.95 கோடி ஒதுக்கீடு.நீதிமன்றங்களின் கட்டுமானப் பணிக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு.பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு மக்கள் இணையதளம் விரைவில் தொடங்கப்படும்மானியம், உதவித் தொகைக்கு ரூ.75,723 கோடி ஒதுக்கீடு.மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ.20,627 கோடியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.