தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானம் ரத்து!
கொரோனா தொற்று பரவலால் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுவரை தமிழகத்தில், 16,277 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 111 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
அந்த வகையில், தூத்துக்குடியில் இதுவரை இந்த கொரோனா வைரஸால் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரிப்பதால், இன்று தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.