கூகுளை நம்புற பொண்டாட்டி ! என்னைய நம்பமாற்றா காவல்நிலையம் சென்ற Google Map !
இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருப்பது Google Map.இந்த செயலியால் தமிழ்நாட்டை சேர்த்த ஒரு கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது .
நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த சந்திரசேகர் என்ற நபர் கூகுள் மேப் செயலியால் தன மனைவி தன் மீது சந்தேகப்படுவதாகவும் தங்களுக்குள் அடிக்கடி பிரெச்சனை ஏற்படுவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் .
அதில் அவர் கூறியிருப்பது கடந்த சில மாதங்களாக என் மனைவி Google Map செயலியை வைத்துக்கொண்டு நான் எங்கு செல்கிறேன் என்று என்னை தூங்கக்கூடவிடாமல் தொந்தரவு செய்கிறாள் .இதை பற்றியே எந்நேரமும் யோசித்துக்கொண்டு அவளும் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார் .
கூகுளை நம்பும் அவள் என்னை நம்ப மறுக்கிறாள் ,கூகுளால் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .இதனை கருத்தில் கொண்டு கூகுள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .மேலும் எனக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு கூகுள் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டுள்ளார் .
ஆனால் காவல்துறையோ இந்த புகாரை பதியாமல் கணவன் மற்றும் மனைவியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது .