சொல்லவே இல்ல..வாட்ஸ் ஆப் செயலியில் இப்படி ஒரு அப்டேட்டா.!

Default Image

 வாட்ஸ் ஆப் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு பல பயனுள்ள வசதிகளை வழங்கி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, தற்பொழுது QR-code அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.

உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற்றி கொள்ளவும், அரட்டை அடிக்கவும், ஒருவருக்கு கால் செய்து பேசுவது, புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்ற வேலைகளுக்காக உபயோகித்து வருகின்றனர். 

மேலும், தனது ஆன்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு பல வசதிகளை வழங்கி வந்த வாட்ஸ் ஆப் நிறுவனம், தற்பொழுது QR code-ஐ கொண்டுவந்துள்ளது. இது, வாட்ஸ் ஆப் பீட்டா 2.20.171 வெர்சனில் வழங்கப்பட்டது. இந்த QR-code மூலம் நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பி, நீங்கள் உங்கள் நம்பரை பகிர்ந்து கொள்ளலாம்.

QR-code:

இந்த QR-code ஐ உங்களின் ப்ரொபைல் மெனுவில் நீங்கள் காணலாம். உங்களின் QR-code ஐ அனுப்புவது மட்டுமின்றி, மற்றவரின் QR-code ஐ நீங்கள் ஸ்கேன் செய்ய முடியும். அவ்வாறு செய்தால், உங்களின் கான்டாக்ட் லிஸ்டில் அவரின் நம்பர் சேர்ந்து விடும். மேலும், ஏற்கனவே வைத்து கொண்ட QR-code ஐ வைத்து கொள்ளவோ, அல்லது ரிசேட் செய்து கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி, தற்பொழுது பீட்டா 2.20.171 வெர்சனில் மட்டுமே வழங்கப்பட்டது எனவும், விரைவில் ஸ்டேபில் வெர்சனில் வெளியாகும் என வாட்ஸ் ஆப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வாட்ஸ் ஆப்-ல் ஸ்டேட்டஸ் அளவு 15 நொடிகளாக குறைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது 30 விநாடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்