இந்த மாநிலத்தில் விமான சேவை இல்லை.!

Default Image

இன்று மேற்கு வங்கத்தில் விமான சேவை தொடங்க தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இதனையடுத்து, 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான பாலங்கள், வீடுகள், மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தனர்.

இந்த புயலால் 80-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக மேற்கு வங்கம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடியும், ஒடிஷாவிற்கு ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், புயலால் படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50,000 நிதி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போது  மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  இயல்பு நிலை திரும்ப சில தினங்கள் ஆகும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இன்று  முதல் நாடு முழுவதும்  உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நாளை விமான சேவை தொடங்க வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக மே 28-ம் தேதி முதல் விமான சேவையை அனுமதிக்கவும் என மேற்கு வங்க அரசு கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்