தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் எப்போது தொடங்கும்.? அமைச்சர் தகவல்.!
ஜூன் மாதம் 2ஆம் வாரம் முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. பள்ளி கல்லூரிகள் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும்? பொதுத்தேர்வுகள் எப்போது தொடங்கும்? நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் எப்போது ஆரம்பம் ஆகும் என பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் 2ஆம் வாரம் முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதன் மூலம் 7300 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த பயிற்சி வகுப்புகள் 9 கல்லூரிகளில் 35 நாட்கள் நடைபெறும் என கூறியுள்ளார்.