அம்மாவாகும் மைனா நந்தினி.! உண்மைதான் அவரே தெரிவித்த தகவல்.!
தற்போது மைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மைனாகவாக அறிமுகமானவர் நந்தினி. அதன் பின்னர் இவரை மைனா நந்தினி என்று சொன்னாலே அறிவார்கள். அதனையடுத்து, பிரியமானவள் கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார் நந்தினி.
அதனையடுத்து ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் தான் நடிகரான யோகேஸ்வரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது மைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பலர் அந்த தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.