இளையதலைமுறை ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையை படிக்க வேண்டும்!

Default Image

வைகோ, ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையை இளைய தலைமுறை படிக்க வேண்டும் என்று  கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். அண்டவெளி அறிவியலை எளிய மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர். 21 வயதிலேயே நரம்புத் தாக்குதலால், உடல் இயக்கத்தை இழந்தார். கை, கால்கள் செயலற்றுப் போயின. பேச முடியாதவர் ஆனார். என்றபோதிலும், இவரது மூளையின் கட்டளைகளைப் பதிவு செய்யக்கூடிய கணினியைப் பொறியாளர்கள் உருவாக்கித் தந்தனர். அதன் துணையோடு ஆய்வுகளை நிகழ்த்தி, அண்டவெளி குறித்துப் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்துக் கொண்டே இருந்தார். அவரது வாழ்க்கை ஒரு பாடம். இளைய தலைமுறை அவரை படிக்க வேண்டும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்