இன்று முதல் தமிழகம் முழுவதும் சலூன் திறப்பு

Default Image

இன்று முதல் மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்களை  திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால், மாநில அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலத்திலும் சலூன் கடைகளை திறந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து, இன்று முதல் மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லை. குளிர்சாதன வசதி இருப்பின் கடைகளில் அதை கண்டிப்பாக பயன்ப்படுத்தக் கூடாது என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன்களில் வேலை செய்கிற பணியாளர்களுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு  காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சலூன்களில் அனுமதிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் ஊராக பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க மத்தியஅரசு அனுமதி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்