பாகிஸ்தான் விமான விபத்தின் கடைசி திக் திக் நிமிடங்கள்.. விமானியின் கடைசி ஆடியோ வெளியானது !

Default Image

பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 99 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து தொடர்பான விமானி பேசிய கடைசி திக் திக் ஆடியோ ஒன்று வெளியானது.

பாகிஸ்தான், லாகூரிலிருந்து கராச்சியை நோக்கி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான PK-8303 விமானம் புறப்பட்டது. அந்த விமானம், கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், திடீரென விமான நிலையத்திற்கு அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது.

இதுவரை 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேர் அந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2 பேர் அந்த விபத்தில் இருந்து காயங்களுடன் தப்பினர். அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பான ஒரு வீடியோ, அங்குள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அந்த வீடியோவில், பறந்து வந்து கொண்டிருந்த விமானம், குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இடையே விழுந்தது.

அந்த விமானம், ஓடுபாதைக்கு அருகில் வந்தபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் ஓடுபாதையில் தரையிறங்கமுடியாமல் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கழும் தீயில் எரிந்தது. 

அதில் பயணித்த இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், அதில் ஒருவர் கூறுகையில், திடீரென விமானம் கிலே விழுந்ததாகவும், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதாகவும், அவரை சுற்றி தீ எரிந்து வருவதாகவும் கூறினார். 

அந்த விமானத்தில் இயக்கிய விமானிக்கும் விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியருக்கும் இடையிலான கடைசி உரையாடலின் அவர் “விமானத்தில் ஒரு என்ஜினை இழந்துள்ளோம்” என்று அவர் கூறுகிறார். அதற்க்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர், உங்களுக்காக இரண்டு ஓடுபாதைகளில் ஏதேனும் தரையிறங்குமாறு அவரிடம் சொன்ன விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர், நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம். என கூறினார்.

மேலும் சிறிது நேரத்தில் விமானத்திற்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த சமயமே, விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்