#BREAKING: அவகாசம் தந்ததால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ரத்து.!
தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக சிறப்பு அதிகாரி அறிவித்தார்.
தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்.17 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தாயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து, தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி விஷால் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தாயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்த உத்தரவு பிறப்பித்தது. மேலும், அக்டோபர் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரி ஜெய்சந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசமளித்ததால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக சிறப்பு அதிகாரி அறிவித்தார். மேலும், புதிய தேர்தல் அட்டவணை கடிதம் வாட்ஸ் ஆப் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.