#BREAKING: ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்.!

Default Image

 ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். 

அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு இருதரப்பு வாதங்களையும்  நீதிபதிகள் கேட்டநிலையில்  நீதிபதி செல்வகுமார் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  ஜூன் 1-ஆம் தேதி சரணடைந்து வழக்கமான ஜாமீனை பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்