சென்னை மண்டல வாரியான பட்டியல்.! ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா.!
சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் நேற்று மட்டும் 4 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது. சென்னையில் மட்டும் நேற்று 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரத்தில் 1,768 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,300 பேரும், திரு.வி.க. நகரில் 1079 பேரும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 1000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் இதுவரை 3,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் தற்போது சிகிச்சையில் 5,461 பேர் இருக்கின்றார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.