#BREAKING: நாளை முதல் தமிழகம் முழுவதும் சலூன் திறக்கலாம்.!
நாளை முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லை. குளிர்சாதன வசதி இருப்பின் கடைகளில் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன்களில் வேலை செய்கிற பணியாளர்களுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சலூன்களில் அனுமதிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.