கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரிப்பார்களா என்பதை இதன் மூலம் கண்டறியலாம்!
கொரோனா வைரஸ் இதயம் மற்றும் நுரையீரலை நேரடியாக தாக்குவதால், பாதிக்கப்பட்டவர்களின் இதய அறை மூலம் அவர்கள் இறப்பார்களா? என்பதை கண்டறியலாம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரசின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலக அளவில், 5,194,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 334,621 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை அமெரிக்காவில், 1,620,902 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 96,354 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மவுண்ட் சீனாய் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் இதயம் மற்றும் நுரையீரலை நேரடியாக தாக்குவதால், பாதிக்கப்பட்டவர்களின் இதய அறை மூலம் அவர்கள் இறப்பார்களா? என்பதை கண்டறியலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.