#Breaking: தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா.! 98 பேர் உயிரிழப்பு.!
தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனெவே, தமிழகத்தில் கொரோனாவால் 13,967 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 569 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இன்று 846 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 14,753 பேரில் 7128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் மேலும் இன்று 4 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 7,524 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.