வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப அனுமதி – மத்திய அரசு

Default Image

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.

உலக முழுவவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாயகம் திருப்புவதில் சிக்கல் நிலவி வந்தது. இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டன.

இந்நிலையில், இந்திய அடையாள அட்டை வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவசர தேவைக்கு தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உறவினர்களின் இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு இந்திய வர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுபோன்று திருமணமானவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் இந்தியா வர அனுமதி என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களும் தாயகம் திரும்புபவதற்கான கட்டுபாடுகளை தளர்த்தியது உள்துறை அமைச்சகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்