ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிட மேற்குவங்கம் வந்தடைந்த பிரதமர்!

Default Image

மேற்கு வங்கத்தை வெளுத்து வாங்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்தார். 

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல், 20 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது.  4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆம்பன் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்தார். கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்த அவரை முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்