மதுபானங்கள் இனி வீட்டிற்கே வந்துவிடும்! ஸ்விக்கி நிறுவனத்தின் அதிரடியான சேவை!
வீடுகளுக்கே மதுபானத்தை கொண்டு சேர்க்கும் ஸ்விக்கி நிறுவனம்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால் இந்தியா முழுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்டமாக மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களை தாவிர மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய, அம்மாநில அரசு இந்நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
இந்த சேவை முதல்கட்டமாக ராஞ்சி நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்களது வயதை உறுதி செய்ய, ஏதாகிலும் ஒரு அட்டையாள அட்டையை கொண்டு, ஆன்லைனில் ஆர்டர் செய்யாலாம் என்றும், OTP என்னை பயன்படுத்தி, டெலிவரி செய்யும் நபரிடம் இருந்து மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.