கொரோனவிலிருந்து மீண்ட மகிழ்ச்சி.. ஆஸ்பத்திரி வாசலில் குத்தாட்டம் போட்ட பாட்டி..!
மஹாராஷ்டிராவிலில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 65 வயது முதியவர், மருத்துவமனை வாசலில் குத்தாட்டம் போட்டார். அவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள மங்கல்வாத் பகுதியை சேர்ந்தவர், கல்யாணி. 65 வயதாகும் இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை தனிமைப்படுத்தப்பட்டு, தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதுமட்டுமின்றி, மூட்டுவலி மற்றும் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை ரொம்ப மோசமடைந்தது. மூச்சி விட சிரமமடைந்த அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதைவியுடன் அவர் மூச்சுவிட்டு வந்தார். அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்தார். மேலும், வென்டிலேட்டர் இல்லாமலே அவர் சுவாசிக்க ஆரமித்தார்.
அதுமட்டுமின்றி, அவருக்கு நடந்த கடைசி பரிசோதனையில் “நெகட்டிவ்” என வந்தது. இதனையடுத்து, அங்குள்ள மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த அவர் மருத்துவமனையிலிருந்து கிளம்பினார். அப்பொழுது மருத்துவமனை வாசலுக்கு வந்த அவர், தன்னை மறந்து குத்தாட்டம் போட ஆரமித்தார். அவரை அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.