இன்றைய TOP 10 NEWS: சின்னத்திரை படப்பிடிப்பு முதல் உள்நாட்டு விமான சேவை வரை.!
ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் முன்பதிவு தொடங்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வரும் 25 -ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 லிருந்து அதிகபட்சம் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
ஆம்பன் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுமென மேற்கு வங்க முதல்வர் தெரிவித்தார்.