ராணுவ அதிகாரி கொலை!!
காஷ்மீரில் 8ஆவது தேசிய துப்பாக்கிப் படை பிரிவின் வீரர் ஒருவர் பணியின் போது செல்ஃபோனை உபயோகித்துக் கொண்டிருந்தார் பணியின் போது செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்பது ராணுவ விதி. அந்த ராணுவப் பிரிவின் அதிகாரி மேஜர் ஷிகார் தபா.பலமுறை வீரருக்கு பணி நேரத்தில் செல்ஃபோன் உபயோகிக்கக் கூடாது என எச்சரித்திருந்தார் ஆனால் வீரர் அதை சட்டை செய்யாமல் மீண்டும் மீண்டும் உபயோகித்து வந்தார். மேஜர் தபா அந்த செல்ஃபோனை அவரிடமிருந்து பிடுங்கியுள்ளார். ஃபோன் கீழே விழுந்து உடைந்துள்ளது.
இதனால் வீரருக்கும், மேஜருக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வீரர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் மேஜரை சுட்டு விட்டார். காயம் அடைந்த மேஜர் உயிர் இழந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வீரரின் பெயர் கதிரேசன் என ஒரு வதந்தி உலவுகிறது. உண்மையான பெயர் தெரியவில்லை.