நேற்று மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம்.!
நேற்று மட்டும் மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில், நேற்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதித்தோரின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் கண்டிப்பாக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் விசாகன் அறிவித்தார்.
அதன்படி ,நேற்று முதல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று, மட்டும் மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம் விதிக்கப்பட்டது.