எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா… இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா….

சீன எல்லைக்குள் நுழைந்து சீன வீரர்களின் ரோந்து பணிகளை இந்திய வீரர்கள் தடுப்பதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா உடனடியாக தனது வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது.இதற்கு இந்திய தரப்பில் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது மோதல் நீடித்து வரும் நான்கு முக்கிய இடங்களுள் சிக்கிமில் உள்ள நாகு லா என்ற இடமும் ஒன்று.இது தவிர பாங்கொங் ஏரி, கல்வான் ஆற்றுப்பகுதி மற்றும் லங்மார்போ ஆகிய பகுதிளிலும் மோதல் நீடித்து வருகிறது. இந்த பகுதிகளில் இரு நாட்டு இராணுவங்களும் அதிக படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே மே 5ம் தேதி பாங்கோங் ஏரியிலும், மே 9ல் நாகுலா பகுதியிலும் மோதல் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா கட்டுமானம் ஏற்படுத்தி வருவதாக சீனா கூறி வருகிறது. முன்னதாக சீனாவின் மாவோ இந்தியா மீது போர் தொடுத்த போது அதற்கு இங்கிருந்து ஆதரவு அளித்த ஒரு கட்சி இரண்டாக பிளந்ததை அனைவரும் அறிவார். எனவே இந்தியா-சீனா விவகாரத்தில் இந்தியர்களாக இந்திய உணர்வுடன் இந்த விவகாரத்தை அனுகவேண்டும் என்பதே இந்திய உணர்வுள்ள அனைவரது கோரிக்கையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025