இன்றைய TOP 10 நியூஸ்.! உள்நாட்டு விமான சேவை முதல் அதிபர் ட்ரம்ப் வரை.!

Default Image

WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க..

கொரோனாவால்  ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை  மாநிலங்கள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க..

வரும் 25 -ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 33 வார்டுகளில் “நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” இன்று முதல் செய்லபடுத்தப்படுகிறது. இந்த வார்டுகளில்  நடமாடும் வாகனங்கள் மூலம் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை ஆகியவை எடுக்கப்படும்.

மேலும் படிக்க..

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றமத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க..

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 987 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர்.இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க..

ஆம்பன் புயல் எச்சரிக்கையால், மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க..

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000,295  தாண்டியது.

மேலும் படிக்க..

நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். ஆனால் என்னை இந்த மாத்திரைகள் எதும் செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும் படிக்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen