ஜூலை 24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
மதுரை முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தெரிவித்துள்ளதாவது:மாவட்டத்தில் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 875 பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூலை 24 முதல் 27 வரை நிர்மலா பள்ளியில் நடக்கிறது. ஆறு மாவட்ட கல்வி அலுவலர்கள், மூன்று மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பில் ஒன்பது ‘போர்டுகள்’ இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.எந்த ‘போர்டு’ல் பங்கேற்பது, நேரம், சரிபார்ப்பின் போது கொண்டுவர வேண்டிய சான்றிதழ்கள் விவரங்கள் குறித்து தனித்தனியே தேர்ச்சி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்