தமிழகத்துக்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 15 வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.816 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.330 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், முத்ரா திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரம் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்த விவாதத்தில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Ministry of Finance has released Rs 5005.25 cr as 1st installment of untied basic grants ‘in advance’ for Non-Million-plus cities to 28 states, pending finalisation of the operational guidelines. This would provide the states with vital financial resources at a critical time. pic.twitter.com/OCGvvNHirW
— NSitharamanOffice (@nsitharamanoffc) May 20, 2020