வைகோ கணிப்பு !இனி பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை குறையும் …
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும், எனவே, அதிமுகவின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் நிலை வரும் என்றும், தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து, தமிழ்நாடு மக்களின் நலன்சார்ந்த முடிவை எடுக்க பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், வைகோ கேட்டுக்கொண்டிருக்கிறார்.
உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியிலேயே பாரதிய ஜனதா கட்சி தோற்று இருப்பது அதன் அஸ்திவாரமே அழிந்தது போல இந்த இடைத்தேர்தல் முடிவினை பார்க்கமுடிவதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.