ராயபுரம் மண்டலத்தில் 1,400-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் மொத்தம் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4895 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரம் அடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் இதுவரை 1,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ள நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025