மாணவர்களுக்குக்கான திருக்குறள் சிறப்பு கையேடு; அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்
மேலுார்: மாணவர்கள் கல்வி கற்பதற்கு புதுவிதமான முயற்சிகளை கையாண்ட மேலுார் அரசு பள்ளி ஆசிரியர் சூரியகுமார், முதன் முறையாக ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு சிறப்பு கையேட்டை தயாரித்துள்ளார்.தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் திருக்குறளை பாடமாக கற்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் 6 முதல் 12 வரை 15 அதிகாரங்கள் வீதம் பயிற்றுவிக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஒரே நுாலில் ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ள கையேடு ஒன்றை ஆசிரியர் சூரியகுமார் தயாரித்து உள்ளார்.அவர் கூறியதாவது: திருக்குறளை நன்னெறி பாடமாக 15 அதிகாரங்கள் வீதம் ஆசிரியர்கள் நடத்துவதற்கு ஏதுவாக ஏழு சிறப்பு கையேடுகளை தயாரித்துள்ளேன். அதிகாரத்திற்கு ஒரு நன்னெறி கதை மற்றும் மாணவர்களின் உள்வாங்கும் திறனை சோதிக்க எளிமையான பயற்சிகள் சேர்த்துள்ளேன், என்றார்.கையேட்டை தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலா ராணி வெளியிட, உதவி தலைமை ஆசிரியர்கள் மீனாலோசினி, சுகந்தி ஆகியோர் பெற்று கொண்டனர். இவரது கல்வி பணியை பாராட்ட 98654 02603 ல் தொடர்பு கொள்ளலாம்.