ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு… மாநில முதல்வர் அறிவிப்பு…
ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளுடன், சேர்த்து 4வது முறையாக தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திராவில் மட்டும் 2,489 பேருக்கு தற்போது வரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 52 பேர் பலியாகி உள்ள நிலையில், 1,621 பேர் சிகிச்சைக்குப்பின் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் வெளியாகி உள்ளது. எனினும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை திறக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.