#Breaking: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 3 மணிநேரம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டார்.
அதன்படி,
ஜூன் 15: மொழிப்பாடம்,
ஜூன் 17; ஆங்கிலம்,
ஜூன் 19: கணிதம்,
ஜூன் 22: அறிவியல்,
ஜூன் 24: சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.