பின்னடைவைச் சந்தித்துள்ள பா.ஜ.க.!உத்தரபிரதேச மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி….
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச மாநில இடைத் தேர்தலில் எம்.பி.யாக இருந்த் கோரக்பூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ள பா.ஜ.க. துணை முதலமைச்சர் கேசவ்பிரசாத் மவுரியா எம்.பி.யாக இருந்த புல்பூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், புல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றதைத் தொடர்ந்து எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்தத் தொகுதிகளுக்கும் பீகாரின் அரேரியா மக்களவைத் தொகுதி மற்றும் ஜகனாபாத், பஹாபூவா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் பட்டேல், பாஜ.கா. வேட்பாளர் கவுஷ்லேந்திர சிங்கை 59 ஆயிரத்து 613 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதே போன்று கோரக்பூர் மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி வேட்பாளர் ப்ரவீண் குமார் நிஷாத் முன்னிலை வகித்து வருகிறார்.
பீகார் மாநிலம் அரேரியா மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி ராஷ்ட்ரீய ஜனதாதள வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். பீகாரின் பஹபூவா சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.கவும், ஜகனாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.