உலகில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல‌லாம் 1மணி நேரத்தில்.!

Default Image

தொழிலதிபர் எலோன் மஸ்க் என்பவர், பூமியில் எங்கு வேண்டுமானாலும் ஒரு மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் “BFR” என்ற பெயரிடப்பட்ட‌ புதிய ராக்கெட் கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக‌ உலகிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் காரை (Electric Cars – Tesla) வடிவமைத்து விற்பனையிலும் சாதனைப் படைத்த SpaceX நிறுவனம் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரு மணி நேரத்தில் உலகத்தை சுற்றும் பயணிகள் வாகனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பன்னாட்டு நகரங்களுக்கும் ஒரு மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும்.

செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்ல‌ வேகமுடைய‌ ராக்கெட்டை உருவாக்க முடிகிற நம்மால், பூமியில் வேகமாக பயணிப்பதற்கான வாகனத்தை ஏன் உருவாக்க முடியாது என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் (Elon Musk) எண்ணக்கரு குறித்த‌ ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உலகைச்சுற்ற ப‌யணிக்கும் வாகனம் ஒரு மணி நேரத்தில் 27,000 கிலோமீட்டர் செல்லக் கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவில் நியூயார்க் நகரத்திலிருந்து ஷாங்காய் நகரத்துக்கு கப்பலில் பயணித்து பின்னர் ராக்கெட்டில் பறப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் ஷாங்காய் நகரத்திலிருந்து நியூயோர்க் செல்வதற்கு 39 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூர் டு ஹாங்காங், லாஸ் ஏங்சல்ஸ் டு டொராண்டோ, டோக்கியோ டு சிங்கப்பூர் ஆகிய‌ நகரங்களுக்குப் பறப்பதற்கான‌ நேரத்தினையும் காண்பிக்கின்றது மற்றும் பல்வேறு நாடுகளுக்கு பறக்கும் நேரத்தை கணக்கிடவும் முயற்சி செய்துவருகிறது.

எலான் மஸ்கின் நிறுவனம் அதிவேக‌ பயணங்கள் குறித்த‌ ஆராய்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் ஹைப்பர் லூப் நிறுவனம் (Hyperloop) அதிவேக பயணமுறை தொடர்பாக ஆராய்ச்சிகளையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் வாசிக‌ளுக்கான‌ அதிவேக‌ பறக்கும் ரெயில் படகு ஹைப்பர் லூப் நிறுவனத்தின் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹைப்பர்லூப் வாகனத்தை விட இந்த ராக்கெட் வாகனம் அதிவேகமாக செல்லும் என்று கூறப்படுகிறது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

You can go anywhere in the world at 1 hour!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்