மாவட்ட எல்லையை கடக்க போலி இ-பாஸ்.! முன்ஜாமீனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை.!

Default Image

மாவட்ட எல்லையை கடக்க போலியாக இ பாஸ் தயாரித்த சாதிக் என்பவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை. 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவட்டங்களுக்குள் வேலைக்கு செல்ல இ பாஸ் தேவையில்லை எனவும், ஆனால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மதுரையை சேர்ந்த சாதிக் என்பவர் மாவட்ட எல்லையை கடக்க போலியாக இ பாஸ் தயாரித்து உள்ளார். இதனை கண்டறிந்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இதனால், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு அளித்திருந்தார். 

இந்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இந்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்