போட்டியின்றி தேர்வான உத்தவ் தாக்ரே இன்று சட்டமேலவை உறுப்பினராக பதவியேற்பு…
மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, 6 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் அல்லது மேலவை உறுப்பினராக தேர்வானால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது வந்தது.
இந்நிலையில், வரும் மே 21 -ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 9 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதன் மூலம் தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே தக்கவைத்துள்ளார் இந்நிலையில், இன்று மகாராஷ்ட்டிரா மாநில சட்ட மேலவை தேர்தலில், போட்டியின்றி தேர்வான முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 8 பேர், மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சி மும்பை விதான் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மேலவை தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பால்கர், உத்தவ் தாக்கரே, உள்ளிட்ட 9 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.