#BREAKING: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு.!

Default Image

 சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. இதனால் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்தும் செய்யப்பட்டன.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஜூலை 1 -ம் தேதி தொடங்கும் என சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து  இன்று சிபிஎஸ்இ பள்ளிகளின் 10, 12-ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி,  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளிட்டார். அதில், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்