சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இருந்த 160 காவலர்களுக்கு கொரோனா.!
சென்னையில் இதுவரை 160 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இதுவரை 160 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்கள் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.