ரியல் லைப் குஷி பட ஜோடிகள் இவர்களா !
விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் படம் குஷி. இப்படத்திற்கு பிறகு தான் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
இப்படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் தான் இறுதியில் திருமணம் செய்வார்கள் என்றாலும், இவர்கள் இருவரும் குழந்தை பருவத்திலேயே சந்தித்துக்கொள்வது போல் காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா எடுத்திருப்பார்.
அதே போல் சீனாவில் யீ, சூய் என்ற தம்பதியினர் தங்களுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே யார் என்று தெரியாமல் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
சீனாவில் May Fourth Square என்ற இடத்தில் யீ’யின் மனைவி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார், அதை கணவர் மிகவும் ஆச்சரியமாக பார்த்துள்ளார்.
ஏனெனில் அந்த புகைப்படத்திற்கு பின்புறம் நிற்பது அவர் தானாம், திருமணத்திற்கு முன்பே தன் மனைவியை அவர் சந்தித்ததாக அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு காட்டியுள்ளார்.